இலங்கை தீவிர சிகிச்சை பிரிவில் இல்லாவிட்டாலும் அதிர்ச்சி சிகிச்சை அறையில் உள்ளது: ஈஸ்ட் ஏசியா போரம்


இலங்கை, தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்து வெளியேறியுள்ள போதிலும் இதுவரை அதிர்ச்சி சிகிச்சை அறையிலேயே உள்ளதாக கிழக்காசிய அமர்வு அல்லது ஈஸ்ட் ஏசியா போரம் என்ற அவுஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள பொருளாதார ஆராச்சி பிரிவு தெரிவித்துள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை பொறுத்தவரையில், அது பேரண்ட பொருளாதாரத்தை மீட்டெடுக்கவும் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்தவும் உதவும்.

எனினும் இன்னும் இரண்டு அல்லது மூன்று வருடங்களிலேயே இலங்கை மக்களால் முன்னேற்றத்தை உணரமுடியும் என்று ஈஸ்ட் ஏசியா போரம் குறிப்பிட்டுள்ளது.

இந்த நிலையில் எதிர்வரும் தசாப்தத்தின் பெரும்பகுதிக்கு இலங்கை பொருளாதார அழுத்தங்களை எதிர்கொள்ள நேரிடும் என ஈஸ்ட்ஏசியா போரம் தெரிவித்துள்ளது.