பொதுத் தேர்தல் தொடர்பான முரணான கருத்துக்களை மறுக்கும் ஆணைக்குழு

பொதுத் தேர்தல் தொடர்பில் சமூக ஊடகங்களில் பரப்பப்படும் முரணாண கருத்துக்களை தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ரத்நாயக்க மறுத்துள்ளார்.

பொதுத்தேர்தலை நடத்த அறிவிக்கப்பட்டுள்ள திகதி அரசியலமைப்புக்கு முரணானது என சமூக ஊடகங்களில் பல்வேறு கருத்துக்கள் வெளியாகி வருகின்றன 

பொதுத்தேர்தலை நடத்த நவம்பர் மாதம் 14 ஆம் திகதி ஏற்ற திகதி அல்ல. ஏனெனில் தேர்தலுக்கு வேட்பு மனு தாக்கல் செய்த பின்னர் 5 வார கால இடைவெளி இருக்க வேண்டும் என சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது என சமூக ஊடகங்களில் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

இதற்கு, தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ரத்நாயக்க விளக்கமளிக்கையில்,

பொதுத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான காலவகாசம் அக்டோபர் 11 ஆம் திகதியுடன் நிறைவடைகிறது.

குறித்த திகதியிலிருந்து வேட்மனு தாக்கல் செய்யும் திகதி உட்பட ஐந்துவார இடைவெளி இருக்க வேண்டும் என சட்டம் கூறுகிறது. எனவே இந்த திகதி சரியானது என குறிப்பிட்டுள்ளார்.