வலி சுமந்த உறவுகளின் உயிர்காத்த உணவு - கிளிநொச்சியில் வழங்கப்பட்ட முள்ளிவாய்க்கால் கஞ்சி!

முள்ளிவாய்க்கால் மனிதப் பேரவலத்தை - தமிழ் இனப் படுகொலையை நினைவூட்டும் வகையில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு தொடர்ச்சியாக தமிழர் தாயகம் முழுவதும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

முள்ளிவாய்க்காலில் உயிர்த்த உறவுகளிற்கு அஞ்சலி செலுத்தப்பட்ட நிலையில், அடுத்த சந்ததிக்கு கடத்தும் முகமாக யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தொழில்நுட்ப பீட மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் பொதுமக்களின் பங்களிப்புடன் முன்னெடுக்கப்பட்டது.

அந்தவகையில், யாழ்ப்பாண பல்கலைக்கழக கிளிநொச்சி அறிவியநகர் தொழிநுட்ப 2019 ஆண்டு பிரிவின் மாணவர்களின் ஏற்பாட்டில் இறுதி உயிரை காப்பாற்ற வலி சுமந்த உறவுகளின் உயிர்காத்த உணவான முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டது.

யாழ் பல்கலைக்கழக மாணவர்களால் கிளிநொச்சி அறிவியல் நகர் வளாக A9 வீதி சந்தியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி இன்று மதியம் வழங்கப்பட்டது.