நீண்ட வரிசையில் மக்கள்!! கோட்டாபய பிறப்பித்த விசேட உத்தரவு


கையிருப்பில் உள்ள எரிபொருளை நாடு முழுவதும் உள்ள இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் அனைத்து எரிபொருள் நிலையங்களுக்கும் விநியோகிக்குமாறு அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டு அரச தலைவர் ஊடகப்பிரிவு இந்த விடயத்தினை அறிவித்துள்ளது.

கொழும்பில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் இன்று முற்பகல் இடம்பெற்ற பெற்றோல், டீசல் மற்றும் எரிவாயு விநியோகம் மற்றும் இறக்குமதி தொடர்பான விசேட கலந்துரையாடலின் போதே அரச தலைவர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

அத்துடன் நிதியமைச்சு, மத்திய வங்கியுடன் இணைந்து அரச மற்றும் தனியார் வங்கிகளின் ஒத்துழைப்புடன், போதியளவு எரிபொருளை கோருவதற்கு வசதியளித்து, நாணயக் கடிதங்களை திறக்க திட்டம் வகுக்க வேண்டுமென அரச தலைவர் இதன்போது தெரிவித்துள்ளார்

கடந்த இரண்டு நாட்களாக நாட்டில் எரிபொருளுக்கு கடுமையான தட்டுப்பாடு நிலவுகின்ற நிலையில் எரிபொருளை கொள்வனவு செய்வற்காக என்றும் இல்லாத அளவுக்கு மக்கள் நீண்ட வரிசைகளில் காத்து நிற்கின்றமை குறிப்பிடத்தக்கது.