சுங்கத் திணைக்களத்தினால் கைப்பற்றப்பட்ட 637 வாகனங்களின் தற்போதைய நிலை!

இலங்கை சுங்கத் திணைக்களத்தினால் கைப்பற்றப்பட்ட 637 வாகனங்கள் துறு பிடித்த நிலையில் சிதைவடைந்துள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகம் தெரிவித்துள்ளது.

இவற்றில் 435 வாகனங்கள் மட்டக்குளியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றிற்கு சொந்தமான நிலத்தை வாடகைக்கு எடுக்கப்பட்டு நிறுத்தப்பட்டுள்ளன.

எஞ்சிய 202 வாகனங்கள் ருஹுனுபுர துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக கணக்காய்வு அலுவலகம் வெளியிட்டுள்ள கணக்காய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, குறித்த வாகனங்கள் தொடர்பில் தற்போது வரை விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த வாகனங்கள் தொடர்பான பணிகளை விரைவாக மேற்கொள்ளுமாறு கணக்காய்வுப் பிரிவினர் சுங்கத்திற்குப் பரிந்துரைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.