கொழும்பில் முத்தம் கொடுத்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக துங்கல்பிட்டிய பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குடிபோதையில் தாக்குதலுக்கு இலக்காகி பலத்த காயமடைந்த நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் 55 வயதான வடக்கு பிட்டிபன பிரதேசத்தில் வசிக்கும் நபர் என தெரிவிக்கப்படுகிறது.

கடந்த 8ஆம் திகதி குறித்த நபர் மதியம் குடிபோதையில் வந்ததாகவும், நபர் ஒருவரை முத்தமிட சென்ற போது கோபமடைந்த நபரே இவ்வாறு தாக்கியதாகவும் துங்கல்பிட்டிய பொலிஸார் தெரிவித்தனர்.

மதுபோதையில் பலத்த காயமடைந்தவர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தாக்குதலில் ஈடுபட்டதாக கூறப்படும் 37 வயதுடைய நபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, தாக்குதலில் உயிரிழந்த நபரின் பிரேத பரிசோதனை இன்று நடைபெறவுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.