தமிழ்த் தேசிய பரப்பில் உள்ள இரண்டு அல்லது 3 பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் இணையவுள்ளதாக உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் கட்சி தாவும் அரசியல் முறையை இல்லாது செய்வதற்கான புதிய சட்டம் தங்களது அரசாங்கத்தில் கொண்டு வரப்படும் என ஐக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
பொத்துவில் பகுதியில் நேற்று இடம்பெற்ற ஐக்கிய மக்கள் கூட்டணியின் 21 ஆவது பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனை தெரிவித்தார்.

சிலருக்கு பாராளுமன்ற உறுப்புரிமை கிடைக்கப்பெற்றதன் பின்னர் தாய் தந்தையர் மற்றும் அவர்களின் பிறப்பு என்பன மறந்து போய் விடுகின்றன.
மக்களின் வாக்குகளினால் தெரிவு செய்யப்பட்ட சிலர், நல்லடக்கமா? தகனம் செய்வதா? என்கின்ற பிரச்சினையின் போது கோட்டாபய ராஜபக்சவுக்கு கையை உயர்த்தினார்கள்.
எனினும், முஸ்லிம் மக்களுடைய கலாசார மற்றும் மார்க்க உரிமையைப் பாதுகாப்பதற்காக ஐக்கிய மக்கள் சக்தி செயற்பட்டது.
அதேநேரம், மக்கள் கொடுத்த வரங்களை சிலர் மதுபானசாலை அனுமதிப் பத்திரங்களுக்காக விற்பனை செய்திருக்கின்றார்கள்.
ஒரு பக்கத்திலிருந்து இன்னொரு பக்கத்துக்குத் தாவுகின்ற அரசியலுக்கு ஐக்கிய மக்கள் கூட்டணி அரசாங்கத்தில் முற்றுப்புள்ளி வைக்கப்படும்.
தங்களது சுயலாபங்களுக்காகக் கட்சி மாறுகின்ற அரசியலை நிறுத்துவதற்கு தற்போதைய சட்டங்கள் மேலும் வலுப்படுத்தப்படும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

இதேவேளை இனவாதம் என்பது இலங்கையில் உள்ள மற்றுமொரு அரசியல் செயற்றிட்டமே தவிர மக்களிடம் காணப்படும் விடயமல்ல எனத் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
முஸ்லிம் இளைஞர்களுடன் கொழும்பில் இடம்பெற்ற சந்திப்பொன்றில் கருத்து தெரிவித்த போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இதுவரை காலமும் நாட்டில் ஒழுங்கான ஒரு அரசாங்கம் உருவாகியிருக்கவில்லை. குடும்ப ஆட்சியொன்றே நாட்டில் காணப்பட்டது.
தற்போதைய ஜனாதிபதி, ஐக்கிய தேசிய கட்சியில் உள்ள பலரை தமது ஆலோசகர்களாக வைத்துள்ளார்.
அவர்களிடம் ஆலோசனை பெறும் நிலையில் நாட்டின் ஜனாதிபதி உள்ளாரா? என்ற கேள்வி எழுகிறது.
ஆலோசகர் என்பவர் ஏதாவது ஒரு விடயத்தில் அதிக திறனையும் அனுபவத்தையும் கொண்டவராக இருக்க வேண்டும்.
மேலும் சிங்கள இனத்தவர் என்பதற்குள்ளே வன்முறை உள்ளது. தமிழர் என்பதற்குள்ளே வன்முறை உள்ளது.
இனவாதம் என்பது தனி நபருக்குள் காணப்படும் விடயமல்ல எனவும் அது அரசியல் செயற்றிட்டம் எனவும் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
அதன் பின்னர் ஜனாதிபதி, மகா சங்கத்தினருடன் சிறிது நேரம் கலந்துரையாடியதுடன் நாட்டின் பொருளாதார மீட்சி மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்து மகா சங்கத்தினருக்கு தெளிவுபடுத்தினார்.
அத்துடன், பிரிவெனாக் கல்வி தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினைகள், புனித பூமி சார்ந்த காணிப் பிரச்சினைகள் குறித்தும் அவதானம் செலுத்தப்பட்டதுடன், வடக்கு, கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்தி தொடர்பில் தமிழ் எம்.பி.க்களுடன் நடைபெற்ற கலந்துரையாடல்கள் குறித்தும் ஜனாதிபதி, மகாநாயக்க தேரருக்கு விளக்கமளித்தார்.

இதனிடையே இலங்கையின் உள்நாட்டுப் போரின் போது மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பாகக் குற்றம் சாட்டப்பட்ட எவரையும் தண்டிக்கத் தனது அரசாங்கம் முயலாது என்று அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
அதற்குப் பதிலாக, மனித உரிமை மீறல்கள் எனக் கூறப்படும் குற்றங்களை விசாரிப்பதிலும், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருடன் உடன்பாட்டைப் பெறுவதிலும் கவனம் செலுத்துவதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை வடக்கு கிழக்கு அபிவிருத்தி தொடர்பில் தமிழ் எம்.பிக்களுடன் நடத்தப்பட்ட கலந்துரையாடல்கள் குறித்து ஜனாதிபதி, இலங்கை ராமன்ய மகா பீட மகாநாயக்க தேரருக்கு விளக்கமளித்துள்ளார்.
நாரஹேன்பிட்டி, இலங்கை ராமன்ய மகா நிகாயவின் தலைமையகத்திற்கு நேற்று விஜயம் செய்த அவர் அங்கு ராமன்ய மகா நிகாயவின் மகாநாயக்க தேரர் மகுலேவே விமல நாயக தேரரைச் சந்தித்து ஆசி பெற்றார்.
அதன் பின்னர் ஜனாதிபதி, மகா சங்கத்தினருடன் சிறிது நேரம் கலந்துரையாடியதுடன் நாட்டின் பொருளாதார மீட்சி மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்து மகா சங்கத்தினருக்கு தெளிவுபடுத்தினார்.
அத்துடன், பிரிவெனாக் கல்வி தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினைகள், புனித பூமி சார்ந்த காணிப் பிரச்சினைகள் குறித்தும் அவதானம் செலுத்தப்பட்டதுடன், வடக்கு, கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்தி தொடர்பில் தமிழ் எம்.பி.க்களுடன் நடைபெற்ற கலந்துரையாடல்கள் குறித்தும் ஜனாதிபதி, மகாநாயக்க தேரருக்கு விளக்கமளித்தார்.
இதேவேளை தற்போது வரி குறைப்பை மேற்கொள்வது மிகவும் அபாயகரமானது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
மாவனல்லை பகுதியில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

சிலர் வரி குறைப்பை மேற்கொள்வதாகப் பிரசாரம் செய்கின்றனர்.
மாற்று வரிகளின்றி நாட்டை எவ்வாறு முன்னோக்கிக் கொண்டு செல்ல முடியும்.
அவர்கள் பாலத்தை உடைத்துக் கொண்டு பயணிக்குமாறு கூறுகின்றனர்.
பாலத்தை உடைத்துக் கொண்டு பயணித்தால் அனைவரும் ஆற்றில் விழ நேரிடும்.
தேசிய மக்கள் சக்தியின் விஞ்ஞாபனத்தில் உள்ள திட்டங்களைச் செயற்படுத்தினால் நாட்டுக்கு சுமார் 200 பில்லியன் ரூபாய் இல்லாது போகும்.
வரிகளைக் குறைத்து அதிக சலுகைகள் தருவதாகக் கூறுபவர்களுக்கு அடிப்படை கணிதம் கூட தெரியாது என்றே கூற வேண்டும் என அவர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.