நம்ப முடியாத தருணமாக மாறிய ரொனால்டோவின் செயல்!சவுதி அரேபியாவில் நடந்த கால்பந்து போட்டிக்கு பின் ரொனால்டோவின் வீரர்களான நெய்மர், மெஸ்ஸி, எம்பாப்பேவை கட்டித் தழுவிய நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

நட்புரீதியான போட்டி பாரிஸ் செயின்ட் ஜேர்மைன் மற்றும் ரியாத் லெவன் அணிகளுக்கு இடையிலான நட்புரீதியான கால்பந்து போட்டி நேற்று சவுதியில் நடந்தது.

ரியாத் அணியில் ஜாம்பவான் ரொனால்டோவும், PSG அணியில் ஜாம்பவான் மெஸ்ஸியும் மோதிய இந்தப் போட்டி பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.

இறுதியில் PSG அணி 5 - 4 என்ற கோல் கணக்கில் ரியாத் லெவன் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது.

அதன் பின்னர் ரொனால்டோ  எதிரணி வீரர்களான மெஸ்ஸி, எம்பாப்பே ஆகியோரை கட்டித் தழுவினார்.

இந்த நிகழ்வைப் பார்த்த பலரும் நெகிழ்ச்சியில் ஆழ்ந்தனர். இதனை நம்ப முடியாத தருணம் என குறிப்பிட்டு PSG அணி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.