இஸ்ரேலிய (Israel) தாக்குதல்களுக்கு எதிராக சரியான பதிலடியை கொடுக்க ஈரான் (Iran) தயாராகி வருவதாக உச்ச தலைவர் அலி காமெனியின் மூத்த ஆலோசகர் அலி லரிஜானி எச்சரிக்கை ( Ali Larijani) விடுத்துள்ளார்.
பெய்ரூட்டில் ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லா மற்றும் தெஹ்ரானில் ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே ஆகியோரின் கொலைகளுக்கு பதிலடியாக இஸ்ரேல் மீது ஈரான் பலிஸ்டிக் ஏவுகணை தாக்குதலை நடத்தியது.
அதற்கு பதிலாக ஒக்டோபர் 26 அன்று, இஸ்ரேலிய போர் விமானங்கள் ஈரான் மீது தாக்குதல்களை நடத்தின.
குறித்த தாக்குதலில் ஈரானின் நான்கு படைவீரர்கள் மற்றும் ஒரு குடிமகன் உயிரிழந்தனர்.
எச்சரிக்கை
இவ்வாறானதொரு பின்னணியில், எச்சரிக்கை அளவை உயர்த்தியுள்ள இஸ்ரேல், ஈரானிய பதிலை எதிர்பார்த்து அமெரிக்கா தயாரித்த டெர்மினல் ஹை ஆல்டிடியூட் ஏரியா டிஃபென்ஸ் (THAAD) வான் பாதுகாப்பு அமைப்பை நிலைநிறுத்தியுள்ளது.
இந்த நிலையில், சமீபத்திய இஸ்ரேலிய ஆக்கிரமிப்புக்கு சரியான பதிலை கொடுக்க ஈரானிய இராணுவம் மற்றும் அரசாங்கத்தின் தொடர்புடைய அதிகாரிகள் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அலி கமேனியின் மூத்த ஆலோசகர் அலி லரிஜானியின் எச்சரிக்கை வெளியாகியுள்ளது.