ராஜபக்‌ஷ பரம்பரையே ஒரு திருட்டுக் கும்பல்..! சந்திரிக்கா காட்டம்


ராஜபக்‌ச பரம்பரையினர் இந்நாட்டில் பெரும் கொள்ளைக்காரக் கும்பல் என்று முன்னாள் அதிபர் சந்திரிக்கா கடுமையாக விமர்சித்துள்ளார்.

முன்னாள் அமைச்சர் குமார வெல்கம தலைமையிலான நவலங்கா சுதந்திரக் கட்சியின் இளைஞர் அணி கூட்டமொன்று நேற்றைய தினம் பத்தரமுல்லையில் உள்ள கட்சி தலைமையகத்தில் நடைபெற்றது.

அதன் போது சந்திரிக்கா குமாரதுங்க பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் ​போது மேற்கண்ட குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், ராஜபக்‌ச கும்பல் தாங்கள் கொள்ளையடித்தது போதாது என்று ஏனையவர்களுக்கும் கொள்ளையடிக்க வழியமைத்துக் கொடுத்திருந்ததாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

இந்த கூட்டத்தில் நாட்டின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் கட்சியின் இளைஞர் அணி முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டிருந்தனர்.