தமிழ் நாட்டில் அரசியல்வாதி கொடூரமாக வெட்டிக்கொலை


உத்தரப்பிரதேச  முன்னாள் முதல்வர் மாயாவதி  தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு  மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங், மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த சம்பவமானது நேற்று (05) இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவம் குறித்து வெளியான தகவலின்படி, பெரம்பூரில்  ஆம்ஸ்ட்ராங்கை ஆறு பேர் பேர் கொண்ட மர்ம கும்பல் வெட்டிவிட்டு உடனடியாக சம்பவ இடத்திலிருந்து தப்பிவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, அங்குவந்த பொலிஸார் ஆம்ஸ்ட்ராங்கை மீட்டு கிரீம்ஸ் பகுதியிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.


இருப்பினும், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி ஆம்ஸ்ட்ராங் உயிரிழந்த நிலையில் மறுபக்கம் தப்பியோடிய ஆறு பேரைக் கண்டுபிடிக்க பொலிஸார் தனிப்படை அமைத்து தேடிவருவதாக தெரவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தொழில் போட்டி அல்லது முன்விரோதம் காரணமாக ஆம்ஸ்ட்ராங் கொல்லப்பட்டிருக்கலாம் என்று தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.