வவுனியா(Vavuniya) உட்பட வடமாகாணத்திலுள்ள பொது மக்களிடம் காவல்துறையினர் வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளனர்.
அதன்படி, அண்மையில் மினுவாங்கொடை பகுதியில் இடம்பெற்ற 7 கோடி ரூபா பண கொள்ளையுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் வவுனியா மற்றும் வடமாகண பிரதேசங்களில் நடமாடுவதாக இரகசிய தகவல் ஒன்று கிடைக்கப்பெற்றுள்ளது.
இதன்போது, சீதுவ பகுதியைச் சேர்ந்த பிரேசுமனி துஷார இந்திக்க சொய்சா மற்றும் உடுகம்பொல பகுதியைச் சேர்ந்த டபிள்யூ.ஏ.டி சமன் ரணசிங்க ஆகிய இருவரே கொள்ளை சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என அடையாளர் காணப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், குறித்த சந்தேக நபர்களை பொதுமக்கள் அடையாளம் காணும் பட்சத்தில் உடனடியாக அறியத்தருமாறு காவல்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
அந்த வகையில், வவுனியா மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரின் தொலைபேசி இலக்கமான 0718596422 அல்லது 0716360020 என்ற இலக்கங்களுக்கு தொடர்பு கொண்டு அறியத்தருமாறு பொதுமக்களிடம் காவல்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.