நங்கூரமிட்டிருந்த மூன்று கப்பல்களுக்கு செலுத்தப்பட்ட பணம்-எரிபொருளை இறக்கும் பணி ஆரம்பம்!

கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்டிருந்த மூன்று கப்பல்களுக்கு பணம் செலுத்தப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.இதன்காரணமாக குறித்த கப்பல்களில் இருந்து எரிபொருளை இறக்கும் பணி இன்று முதல் ஆரம்பிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது

குறித்த கப்பல்களில் 37 ஆயிரம் மெட்ரிக் தொன் டீசல், ஒரு இலட்சம் கச்சா எண்ணெய் மற்றும் 20 ஆயிரம் மெட்ரிக் தொன் பெட்ரோல் ஆகியவை இறக்கப்படவுள்ளன.இதற்கிடையில் சராசரியாக 4 ஆயிரம் மெட்ரிக் தொன் மற்றும் மூவாயிரம் மெட்ரிக் தொன் பெட்ரோல் நாடு முழுவதும் விநியோகிக்கப்படுகிறது எனவும் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.