நேபாளத்தில் மோசமான விமான விபத்து..! வெளிநாட்டவர்கள் உட்பட 68 பேர் பலி


இரண்டாம் இணைப்பு

நேபாளத்தின் மத்திய பகுதியில் 72 பேருடன் சென்ற விமானம் விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 68 பேர் உயிரிழந்துள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த விமானத்தில் பயணித்த எந்தவொருவரும் உயிர்பிழைக்க வாய்ப்பில்லை என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், இன்றைய தினம் மீட்பு பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

முதலாம் இணைப்பு

நேபாளம் பொக்காரா சர்வதேச விமான நிலையத்தின் ஓடுபாதையில் பயணிகள் விமானம் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

மீட்பு பணிகள் நடந்து வரும் நிலையில், விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

இதுவரை 16 உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

விபத்தில் சிக்கிய விமானத்தில் 68 பயணிகளும் மூன்று விமான குழுவினரும் பயணம் செய்துள்ளனர்.

மலேசியா காத்மாண்டுவில் இருந்து நேபாளம் கஸ்கி மாவட்டத்தில் உள்ள பொக்காரா சர்வதேச விமான நிலையத்திற்கு சென்ற எட்டி ஏர்லைன்ஸின் விமானமே விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்து நடந்த பகுதியில் இருந்து புகை வெளியேறுவது போன்ற புகைப்படங்களும் காணொளிகளும் சமூக வலைதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.