உடன் நடைமுறைக்கு வரும் வகையில் ரணில் வெளியிட்ட வர்த்தமானி


இலங்கையின் தொடருந்து ஊழியர்கள் நாளை முதல் பணி விலகல் போராட்டத்தை அறிவித்துள்ள நிலையில், தொடருந்து சேவையை அத்தியாவசிய சேவையாக மாற்றும் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் இந்த வர்த்தமானி அறிவித்தலை அதிபர் ரணில் விக்ரமசிங்க சற்று முன்னர் வெளியிட்டார்.

தொடருந்து பணிப்புறக்கணிப்பு காரணமாக மக்கள் எதிர்கொள்ளக் கூடிய அசௌகரியங்களை தவிர்ப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இன்று நள்ளிரவு 12 மணி முதல் தொடரூந்து சேவையானது, பொதுமக்களின் அத்தியாவசிய சேவையாக மாற்றுமாறு என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, தொடருந்து சேவையை அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தி வர்த்தமானியை வெளியிடுமாறு அதிபரிடம் கோரவுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன இன்று தெரிவித்திருந்தார்.

இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்தப் பிரகடனத்தை மேற்கொள்ளுமாறு அவர் கோரியிருந்தார்.

இன்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பின் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.