விபத்தில் படுகாயமடைந்த பாராளுமன்ற உறுப்பினர் பியசேன சிகிச்சை பலனின்றி மரணம்!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பி.எச்.பியசேன விபத்தொன்றில் சிக்கி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக அக்கரைப்பற்று வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இன்று(வெள்ளிக்கிழமை) காலை அக்கரைப்பற்று பொத்துவில் பிரதான வீதியில் அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு பொதுமயானத்திற்கு முன்பாக இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த பி.எச்.பியசேன பொத்துவில் பிரதேசத்தில் இருந்து பொலநறுவை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த தனியார் பேருந்துடன் மோதுண்டதனாலேயே இந்த இடம்பெறுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விபத்தில் படுகாயமடைந்தவர் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.அக்கரைப்பற்று பொலிஸார் விபத்து தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.