உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பக்தர்களிடம் பண மோசடி: 6 பெண்கள் கைது

அநுராதபுரத்தில், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பக்தர்களிடம் பணமோசடியில் ஈடுபட்ட ஆறு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த கைது நடவடிக்கை இன்று(18.11.2024) இடம்பெற்றுள்ளது.

இதன்போது, அனுராதபுரம், தேவானம்பியதிஸ்ஸ புர, பந்துலகம, வெஸ்ஸகிரிய, திஸ்ஸ ஏரி, ஜயந்திமாவத்தை, கோரகஹா குளம் ஆகிய பகுதிகளில் வசிக்கும் 51 வயதுக்கும் 80 வயதுக்கும் இடைப்பட்ட 6 பெண்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், அநுராதபுரத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க ஜயஸ்ரீ மஹா போதி மற்றும் ருவன்வெலி சாய வழிபாட்டுத் தளங்களில் வழிபாடு செய்ய வரும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பக்தர்களிடம் சிறுநீரக நோய்க்கு சிகிச்சை அளிப்பதற்காக கூறி சந்தேக நபர்கள் பண மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், குறித்த சம்பவம் தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளுக்கமைய சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டதாக உடமல்வ காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும், கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் மேலதிக விசாரணைகளை அநுராதபுர காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.