காளையை அசால்ட்டாக பைக்கில் ஏற்றி சென்ற நபர் - வைரலாகும் வீடியோ…

இப்போதெல்லாம் செல்லப்பிராணிகளை மோட்டார் சைக்கிள் அல்லது காரில் ஏற்றிச் செல்வது வழமையான ஒன்றாகும்.

குறிப்பாக நாய், பூனை போன்ற செல்லப்பிராணிகளை வைத்திருப்பவர்கள், மோட்டார் சைக்களில், காரில் எங்கு சென்றாலும் இந்த செல்லப்பிராணிகளை உடன் அழைத்துச் செல்ல மறக்க மாட்டார்கள்.

இந்நிலையில் காளை மாடு ஒன்று மோட்டார் சைக்கிளில் அமர்ந்து பயணிக்கும் காணொளி ஒன்று தற்போது இணைத்தில் வைரலாகி வருகின்றது.

அந்த நபர் எப்படி காளையை பைக்கில் உட்கார வைத்து, பின்னால் அமர்ந்து மோட்டார் சைக்கிளை ஓட்டுகிறார் என்பதை வீடியோவில் காணலாம்.

 இந்த வேடிக்கையான காட்சியை கார் ஓட்டுநர் ஒருவர் தனது மொபைலில் பதிவு செய்துள்ளார், இது சமூக வலைதளங்களில் உடனடியாக வைரலானது.

 சிலர் இந்த வீடியோவில் வருபவர் நைஜீரியாவைச் சேர்ந்தவர் என்றும், அங்குள்ளவர்கள் அடிக்கடி இதுபோன்ற வினோதமான செயல்களைச் செய்வதாகவும் கூறி வருகின்றனர்.