''நான் புலிகளுக்கு எதிரானவன் இல்லை" அதுரலியே ரத்ன தேரர்“நான் விடுதலைப் புலிகளுக்கு எதிரானவன் கிடையாது மேற்கத்தேய நாடுகளுக்கு அடிமைச் சேவகம் புரிவதை எதிர்க்கும் நாட்டுப்பற்றாளன்” என அதுரலியே ரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.

பொது நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,

“என்னைப் பற்றி பெரும்பாலானவர்கள் நான் சிங்கள இனவாதி, புலிகளுக்கு எதிரானவன் என்று கற்பிதம் செய்து கொண்டிருக்கின்றார்கள் ஆனால் நான் அப்படியானவன் இல்லை.

அந்தந்த சந்தர்ப்பங்களின் அரசியல் சூழ்நிலைகளுக்கு ஏற்பவே எனது கருத்துக்களை வெளியிட்டிருந்தேன் மற்றபடி நான் மக்களை மையப்படுத்திய பொருளாதாரத் தன்னிறை குறித்த கொள்கையைக் கொண்டவன்.

மேற்கத்தேய நாடுகளுக்கு அடிமைச் சேவகம் புரிவதை எதிர்க்கும் நாட்டுப்பற்றாளன் ” என தெரிவித்தார்.