ஊரடங்கு மத்தியிலும் 35வது நாளாகவும் தொடரும் கோட்டா கோ கம போராட்டம்!

நாட்டில் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையிலும் கொழும்பு கோட்டா கோ கமவில் முன்னெடுக்கப்பட்டு வரும் அரசாங்கத்துக்கு எதிரான போராட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) 35வது நாளாகவும் தொடர்கிறது.நாடு எதிர்கொண்டுள்ள நெருக்கடிகளுக்கு காரணமான ஜனாதிபதி அதற்கு பொறுப்பு கூற வேண்டுமென போராட்டக்காரர்கள் வலியுறுத்தியுள்ளனர்.கடந்த ஏப்ரல் மாதம் 9 ஆம் திகதி கொழும்பு காலிமுகத்திடல் பகுதியில் அமைதியான முறையில் ஆரம்பமான மக்கள் எழுச்சிப் போராட்டம் ஒரு பல எதிர்ப்புகளையும் மீறி முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.இந்தப் போராட்டத்திற்கு பலரும் ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், வழமைப்போன்று நேற்று இரவும் அரசாங்கத்தை வீட்டுக்குச் செல்லுமாறு கோசமெழுப்பி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.மேலும் இதன்போது, புதிய பிரதமராக பதவியேற்றுள்ள ரணில் விக்ரமசிங்கவிற்கும் எதிர்ப்பு வெளியிடப்பட்டதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.