கார்த்திக்கும் விரைவில் தேசிய விருது கிடைக்கும்-நடிகர் கருணாஸ்!

கார்த்தி, அதிதி நடிப்பில் உருவாகியுள்ள விருமன் திரைப்படத்தின் ட்ரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா மதுரையில் நடைபெற்றது. அதில் நடிகர் கார்த்தி, சூர்யா, கருணாஸ், சூரி, இயக்குனர் ஷங்கர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர்.நிகழ்ச்சியில் பேசிய கருணாஸ் தம்பி முத்தையா போன்ற இயக்குனர்கள் குறைவாக உள்ளனர். மண் சார்ந்து மக்கள் சார்ந்து திரைப்படம் எடுக்க கூடிய இயக்குனர்கள் குறைவாக உள்ளனர். இந்த படத்தின் இறுதியில் கார்த்தி பிரகாஷ் நடிப்பு நிச்சயமாக வரும் ஆண்டில் அவருக்கான சிறந்த நடிகர்களுக்கான தேசிய விருதை கிடைக்கும். சூரரை போற்று படத்திற்கு தேசிய விருது கிடைக்கும் என்று முதல் நாள் படப்பிடிப்பில் சொன்னது நான் தான் என்று கூறினார்.