கார்த்தி நடிப்பில் வெளியானது சர்தார்-ரசிகர்கள் கொண்டாட்டம்!

நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘சர்தார்’. இரும்புத்திரை, ஹீரோ ஆகிய படங்களின் இயக்குநர் பி.எஸ்.மித்ரன் இயக்கியுள்ள இத்திரைப்படத்தில் ரஜிஷா விஜயன், ராஷி கண்ணா, லைலா உள்ளிட்ட பல திரை நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, ரசிகர்களை கூடுதல் உற்சாகமூட்டும் வகையில்  ’சர்தார்’ திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. சென்னை அசோக் நகரில் உள்ள காசி திரையரங்கில் முதல் காட்சியை கான வந்த ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பேனர்கள் அமைத்து, பேண்டு வாத்தியங்கள் இசைத்து, உற்சாகத்துடன் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

காசி திரையரங்கில் தனது ரசிகர்களுடன் படம் பார்க்க நடிகர் கார்த்தி மற்றும் ’சர்தார்’ படக்குழுவினர் வருகை தந்தனர். அவர்களை ஆரவாரத்துடன் ரசிகர்கள் வரவேற்றனர். கார்த்தி நடிப்பில் இறுதியாக வெளியான விருமன் மற்றும் பொன்னியின் செல்வன் பெரும் வெற்றி பெற்றதை அடுத்து சர்தார் திரைப்படமும் வெற்றி பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.