அமெரிக்காவில் கொவிட் தொற்றுநோய் முடிவுக்கு வந்துவிட்டதாக ஜோ பைடன் அறிவிப்பு!

கொவிட் தொற்று நோயால் உயிரிழந்த அமெரிக்கர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் அமெரிக்காவில் கொவிட் தொற்றுநோய் முடிவுக்கு வந்துவிட்டதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அறிவித்துள்ளார்.சிபிஎஸ் தொலைக்காட்சியில் ஜோ பைடன் 60 நிமிடங்களுக்கு அளித்த செவ்வியில் அவர் இதனைத் தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் கூறுகையில் ‘எங்களுக்கு இன்னும் சிக்கல் உள்ளது. நிலைமை வேகமாக முன்னேறி வருகிறது. வைரஸைக் கட்டுப்படுத்த அமெரிக்கா இன்னும் நிறைய வேலைகளை செய்து வருகின்றது. நீங்கள் கவனித்தால் யாரும் முகக்கவசம் அணியவில்லை.எல்லோரும் நல்ல நிலையில் இருப்பதாகத் தெரிகிறது. அது மாறுகிறது என்று நினைக்கிறேன்’ என கூறினார்.

எனினும் ஒவ்வொரு நாளும் சராசரியாக 400 அமெரிக்கர்கள் வைரஸால் இறக்கின்றனர் என்று புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன.உலக சுகாதார அமைப்பின் தலைவர் கடந்த வாரம் தொற்றுநோயின் முடிவு விளிம்பில் உள்ளது என்று கூறினார்.

ஆனால், நிர்வாக அதிகாரிகள் திங்களன்று அமெரிக்க ஊடகங்களுக்கு கருத்துகள் கொள்கையில் மாற்றத்தைக் குறிக்கவில்லை என்றும், தற்போதைய கொவிட்-19 பொது சுகாதார அவசரநிலையை நீக்குவதற்கான திட்டங்கள் எதுவும் இல்லை என்றும் கூறினார்.ஒகஸ்ட் மாதம், அமெரிக்க அதிகாரிகள் பொது சுகாதார அவசரநிலையை ஜனவரி 2020ம் ஆண்டு முதல் ஒக்டோபர் 13ம் திகதி வரை நீட்டித்தனர். இன்றுவரை, ஒரு மில்லியனுக்கும் அதிகமான அமெரிக்கர்கள் கொரோனா வைரஸால் இறந்துள்ளனர்.

ஜோன்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் தரவுகள் ஏழு நாள் இறப்புகளின் சராசரி தற்போது 400க்கும் அதிகமாக உள்ளது கடந்த வாரத்தில் 3,000க்கும் அதிகமானோர் இறந்துள்ளனர்.

ஜனவரி 2021இல் ஒப்பிடுகையில், ஒரு வார கால இடைவெளியில் 23,000க்கும் அதிகமானோர் வைரஸால் இறந்துள்ளனர். மொத்த அமெரிக்க மக்கள் தொகையில் சுமார் 65 சதவீதத்தினர் முழுமையாக தடுப்பூசி போடப்பட்டதாகக் கருதப்படுகிறது.