இலங்கையின் தற்போதைய நிலைமைகள் குறித்து இந்திய நாடாளுமன்றில் விளக்கமளிக்கின்றார் ஜெய்சங்கர்

இலங்கையின் தற்போதைய நிலைமை குறித்து இந்திய நாடாளுமன்ற வெளிவிவகார ஆலோசனைக் குழுவிற்கு விளக்கமளிக்க இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் முடிவு செய்துள்ளார்.

எதிர்வரும் சனிக்கிழமை நடைபெறவுள்ள இந்த சந்திப்பில் இந்திய வெளிவிவகார செயலாளர் உட்பட பல உயர் அதிகாரிகள் கலந்து கொள்ளவுள்ளனர்.

இந்தக் குழுவில் இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பலர் உள்ளனர்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் அரசியல் விடயங்கள் குறித்து இந்திய வெளிவிவகார அமைச்சர் விரிவான விளக்கம் அளிப்பார் என்று கூறப்படுகிறது.

இந்திய அரசாங்கம் அண்மையில் இலங்கைக்கு வழங்கிய உதவிகள் குறித்து வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கமளிப்பர் என்றும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.