இஸ்ரேலில் நாடாளுமன்றம் அதிகாரப்பூர்வமாகக் கலைப்பு!

இஸ்ரேலில் ஆளும் அரசாங்கம் பெரும்பான்மையை இழந்ததால் நாடாளுமன்றம் அதிகாரப்பூர்வமாகக் கலைக்கப்பட்டுள்ளது.இஸ்ரேலில் நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்கான கட்டமூலம் கடந்த ஜூன் 22ஆம் திகதி நிறைவேற்றப்பட்டது.

இதையடுத்து, அந்த நாட்டில் மூன்றே ஆண்டுகளில் 5ஆவது பொதுத் தேர்தலை நடத்துவதற்கான நடவடிக்கை அடுத்தக்கட்டத்துக்குச் சென்றது.இதனால், தற்போதைய பிரதமர் நாஃப்டாலி பென்னட் தனது பதவியை இராஜிநாமா செய்வார. மேலும், ஆட்சிப் பொறுப்பை கூட்டணிக் கட்சித் தலைவரும் வெளியுறவுத் துறை அமைச்சருமான யாயிர் லபீடிடம் அவர் ஒப்படைப்பார்.

மேலும், புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் எதிர்வரும் நவம்பர் 1ஆம் திகதி நடைபெறும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.