எலிசபெத் மகாராணிக்கு முதலாவதாக அஞ்சலி செலுத்திய தமிழ் பெண் வெளியிட்ட தகவல்

இலங்கை வம்சாவளியை சேர்ந்த வனேசா நந்தகுமாரன் என்ற 56 வயதான பெண் பிரித்தானிய மகாராணி எலிசபெத்திற்கு முதலாவதாக அஞ்சலி செலுத்தியுள்ளார்.

இரண்டாவது எலிசபெத் மகாரணியின் உடல் நேற்று முன் தினம் லண்டனில் உள்ள வெஸ்ட்மினிஸ்டர் மண்டபத்தில் பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டடது.

இதன் போது இறுதி அஞ்சலி செலுத்துவதற்கான முதல் சந்தர்ப்பம் வனேசா நந்தகுமாரன் என்ற இலங்கை வம்சாவளியை சேர்ந்த தமிழ் பெண்ணுக்கு வழங்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

இவ்வாறு முதலாவதாக அஞ்சலி செலுத்திய வனேசா நந்தகுமாரன் கடந்த பெப்ரவரியில் தனது கணவர் இறந்ததாகவும் அவரின்மரணத்தை சமாளிக்க இந்த அனுபவம் தனக்கு உதவியது என்கிறார்.

மேலும், மண்டபத்திற்கு முதலில் வந்ததில் "மகிழ்ச்சியாக" இருப்பதாகவும், வரலாற்றில் இடம்பிடித்து இருப்பதாகவும் கூறினார்.

"இந்த வாய்ப்பை பொதுமக்களுக்கு வழங்கியதில் மகிழ்ச்சியாக உணர்வதாகவும் அதிலும் நான் மிகவும் பாக்கியமாக இருக்கிறேன் என்றும் இதை நான் என் வாழ்நாள் முழுவதும் நினைவில் கொள்வேன்." எனவும் தெரிவித்துள்ளார்.

வடமேற்கு லண்டனில் உள்ள ஹாரோவைச் சேர்ந்த வனேசா, ஆல்பர்ட் கரையில் 50 மணி நேரத்திற்கும் மேலாக வரிசையில் நின்று முதலாவதாக ராணிக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இரண்டாவது எலிசபெத் மகாரணியின் இறுதிச்சடங்குகள் எதிர்வரும் 19 ஆம் திகதி லண்டனில் உள்ள வெஸ்ட்மினிஸ்டர் தேவாலயத்தில் நடைபெறவுள்ளது.

இதற்காக ஏற்கவே அவரது உடல் ஸ்கொட்லாந்தில் இருந்து லண்டனுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. உடல் மக்களின் அஞ்சலிக்காக தற்போது பகிங்ஹாம் மாளிகையில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், பிரித்தானிய மகாராணியின் மறைவுக்கு உலக தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இதேவேளை, பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத் காலமானதையடுத்து வேல்ஸ் முன்னாள் இளவரசர் சார்ள்ஸ் பிரித்தானிய மன்னராக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.