சிறிலங்கா நாணயங்களை அச்சிடுவதற்கு தடை..!

இலங்கை தொடர்ந்தும் பணம் அச்சிடுவதை சர்வதேச நாணய நிதியம் தடை செய்துள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடாகவியலார் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளுக்கு பிறகும் நாங்கள் தொடர்ந்து பணத்தை அச்சடித்து கடன் வாங்கி வருவதால் தான் எங்களால் கடனை அடைக்க முடியாமல் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

இப்போது நாம் கடனாளிகளுக்கு அந்த கடன்களை செலுத்தாத காரணத்தால் சர்வதேச நாணய நிதியம் மற்றும் பிறகடன் வழங்கும் நிறுவனகளால் பணம் அச்சிடுவதை தடை செய்துள்ளனர்.

பணத்தை வடிவமைக்க அனுமதி இல்ல. அந்தச் சூழ்நிலையில் தான் நாட்டின் நிதியை நிர்வகிக்க வேண்டும் என சுட்டிக்காட்டியுள்ளார்.