அவுஸ்திரேலிய வீரரின் முறைகேடான செயல்: இந்திய ரசிகர்களை வெறுப்பேற்றிய புகைப்படம்

இந்திய அணியை வீழ்த்தியதன் மூலம் உலக கிண்ணத்தை ஆறாவது தடவையாகவும் அவுஸ்திரேலிய அணி நேற்றயதினம் வெற்றி பெற்றது.

இந்நிலையில், போட்டியில் வெற்றி பெற்றதன் பின்னர் அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் மிட்செல் மார்ஷின் செயல் குறித்து பலரும் விமர்சனங்களை வெளியிட்டு வருகின்றனர்.

இதன்போது, உலக கிண்ணத்தை வெற்றி பெற்றதன் பின்னர், அந்த கிண்ணத்தின் மீது சாதாரணமாக தனது கால்களை வைத்து ஓய்வெடுக்கும் அவரின் புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது

மேலும், அதனை பலரும் அவமரியாதையான செயல் என விமர்சித்துள்ளனர்.

குறித்த புகைபடத்தில் அவர், நாற்காலியில் அமர்ந்தவாறு குளிர்பானமொன்றை அருந்திக் கொண்டு, உலகக் கிண்ணத்திற்கு மேல் தனது கால்களை வைத்துள்ளார்.