வட தாயகத்திற்கு சவேந்திர சில்வாவுடன் படையெடுக்கும் நூற்றுக்கணக்கான பௌத்த பிக்குகள்!

யாழ்ப்பாண மாவட்டத்திற்கு நூற்றுக் கணக்கான பௌத்த பிக்குகளுடன் முப்படைகளின் பிரதானி சவேந்திர சில்வாவும் பயணம் மேற்கொள்ளவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாவற்குழி விகாரையில் நடைபெறவுள்ள நிகழ்விற்கே நாளைய தினம் பௌத்த பிக்குகள் மற்றும் சவேந்திர சில்வா ஆகியோர் வரவுள்ளனர்.

நாவற்குழியில் அமைந்துள்ள விகாரையில் புதிதாக அமைக்கப்பட்ட பகுதிக்கு பிரித் ஓதி வழிபாட்டு நிகழ்வுகள் இடம்பெற்றவுள்ளனஇந்த வழிபாட்டை நடத்துவதற்காகவே தென்னிலங்கையில் இருந்து நூற்றுக்கணக்கான பௌத்த பிக்குகள் யாழ்ப்பாணத்திற்கு வரவுள்ளனர். 

யாழிற்கு சவேந்திர சில்வா வருகை தரும்அதேவேளை, தென்னிலங்கையில் இருந்து 128 பௌத்த பிக்குகளும் அழைத்து வரப்படுகின்றனர்.

நாளை காலை முதல், பிரித் ஓதுதல் மற்றும் விசேட பூசை ஏற்பாடுகள் என மிகப் பெரும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவுள்ளன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.