பிரேத பரிசோதனையில் கைமாறும் பெருந்தொகை பணம்: வலுக்கும் சாவகச்சேரி வைத்தியசாலை விவகாரம்

சாவகச்சேரி வைத்தியசாலையில் இறப்பவர்களின் உடல்களை பிரேத பரிசோதைனை செய்து உரிய நேரத்தில் கையளிப்பதில் இழுத்தடிகள் இடம்பெறுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் (Selvarajah Kajendran) தெரிவித்துள்ளார்.

குறித்த விடயத்தை நாடாளுமன்றில் நேற்று (09) உரையாற்றிய போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “வைத்தியர் இந்திரகுமார் (Indira Kumar) என்பவர் வைத்தியசாலைகளில் இறப்பவர்களின் உடல்களை பிரேத பரிசோதனை செய்து உரிய நேரத்தில் கையளிப்பதில் இழுத்தடிகளை மேற்கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு, குறிப்பிட்ட நிறுவனங்களுக்கு தொடர்பு கொண்டு பரிசோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் மற்றும் அதற்காக பெருந்தொகை பணம் கைமாற்றப்பட்டதாகவும் பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளது” என அவர் சுட்டிக்காட்டிள்ளார்.