கோட்டாபய மீண்டும் அரசியலுக்கு வருவது கேலிக்கூத்தானது: பொதுஜன பெரமுன பதில்


நாட்டை விட்டு தப்பிச் சென்ற கோட்டாபய ராஜபக்ச மீண்டும் அரசியலுக்கு வருவது என்பது கேலிக்கூத்தானது, கோட்டாபய ராஜபக்சவை மீண்டும் அதிபர் வேட்பாளராக களமிறக்க வேண்டிய தேவை எமக்கில்லை.

மஹிந்த ராஜபக்சவின் தலைமைத்தவத்தினால் தான் 69 இலட்சம் மக்கள் கோட்டாபய ராஜபக்சவுக்கு ஆணை வழங்கினார்கள் என சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.சந்திரசேன தெரிவித்தார்.

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ச அரச அதிகாரியாக சிறந்த முறையில் செயற்பட்டதால் 2019 ஆம் ஆண்டு அதிபர் வேட்பாளராக களமிறக்கினோம்.

69 இலட்ச மக்களாணை அவருக்கு கிடைத்தது என்று குறிப்பிடுவது தவறு, முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்ஷவின் தலைமைத்துவத்தினால் தான் அவருக்கு 69 இலட்ச மக்கள் ஆணை வழங்கினார்கள்.

69 இலட்ச மக்களாணையுடன் அதிபராக தெரிவு செய்யப்பட்ட கோட்டாபய ராஜபக்ச அரச தலைவராக சிறந்த முறையில் செயற்படவில்லை.