கொழும்பு புதுக்கடை பகுதியில் இன்றைய தினம் பாதாள உலகம் குழு உறுப்பினர் கணேமுள்ள சஞ்சீவ என்பவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் ஊடகவியலாளர்கள் பிரதி அமைச்சர் சுனில் வட்டகலவிடம் கேள்வி எழுப்பியிருந்தனர்.
நாட்டில் இவ்வாறு துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் இடம் பெற்றுக் கொண்டிருந்தால் மக்கள் எவ்வாறு பாதுகாக்கப்பட முடியும் எனவும் அவர்கள் எவ்வாறு அச்சமின்றி வாழ முடியும் எனவும் கேள்வி எழுப்பியிருந்தனர்.
இதன்போது இந்த பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர்கள் இந்த துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பில் பிரதி அமைச்சரை பல்வேறு கேள்விக்கணைகளினால் துளைத்திருந்தனர்.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாகவும் பிரதி அமைச்சர் குறிப்பிட்டிருந்தார்.
தேசிய பாதுகாப்பு உறுதிப்படுத்துள்ளதாக கூறும் அரசாங்கம் நீதிமன்றத்தில் ஒருவருக்கு பாதுகாப்பினை வழங்க முடியாத நிலையில் இருப்பதாக ஊடகவியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த கேள்விகளுக்கு பதில் அளிக்காமலேயே அமைச்சர் சம்பவ இடத்தை விட்டு வெளியேறி இருந்தார்.
வாகனத்தை வரவழைத்து ஊடகவியலாளரின் கேள்விகளுக்கே பதில் அளிக்காது அவர் வெளியேறியிருந்தார்.