யாழ் (Jaffna) இணுவில் கிழக்கு சேர்ந்த கஜீனா தர்ஷன் (Gajina Dharshan) என்ற மாணவி ஆசிய சதுரங்க இறுதிப் போட்டிக்கு தெரிவாகியுள்ளார்.
ஆசிய சதுரங்க இறுதிப் போட்டியில் இலங்கை சார்பாக தாய்லாந்து (Thailand) செல்லவிருக்கும் செல்வி கஜிஷனா தர்ஷன், யாழ் கொக்குவில் இந்து ஆரம்ப பாடசாலை தரம் இரண்டில் கல்வி பயின்று வருகின்றார்.
வடக்கு மாகாணத்தை சேர்ந்த இந்த சிறுமி தேசிய ரீதியில் இலங்கை (Sri Lanka) பாடசாலைகள் சதுரங்க சம்மேளத்தினால் நடாத்தப்பட்ட சதுரங்க போட்டியில் ஏழு வயதிற்குட்பட்ட பிரிவில் தங்க பதக்கத்தை பெற்று கொடுத்துள்ள நிலையில் இம்மாதம் தாய்லாந்தில் டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள ஆசிய இறுதி போட்டியில் இலங்கை சார்பில் போட்டியிடவுள்ளார்.
அத்தோடு, சேர்ஜியாவில் நடைபெறவுள்ள உலக பாடசாலைகள் சதுரங்க போட்டிகளிலும் மற்றும் Fide cadet போட்டிகளிலும் இலங்கை அணியின் உத்தியோகபூர்வ வீரராக விளையாடவுள்ளார்.