ஈழத்தின் மீதும் மக்கள் மீதும் பற்றுக்கொண்டு தமிழீழ கனவோடு தம் இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களை நினைவு கொள்ளும் புனித நாள் இன்றாகும்.
இந்த நாளில் தாயகத்தின் பல பகுதிகளிலும் மாவீரர்களை நினைவுகூர்ந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்தவகையில், பிரான்ஸிலும் மாவீரர் நினைவெழுச்சி நாள் உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டுள்ளது.
இதன்போது அனைத்து மாவீரர் உறவுகளும் தங்களின் மாவீரர் உறவுகளின் உருவப்படங்களுக்கு சுடர் ஏற்றி மலர் வணக்கம் செலுத்தினர்.