நாடாளுமன்றுக்கு செல்லும் வைத்தியர் அர்ச்சுனா: தொடரும் சாவகச்சேரி வைத்தியாலை சர்ச்சை

சாவகச்சேரி வைத்தியசாலையின் நடைபெறும் ஊழல்கள் தொடர்பில் நாடாளுமன்றில் கதைக்கவிருப்பதாக வைத்தியர் அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.

இதன்போது, நாடாளுமன்றத்திற்கு வந்து இந்த பிரச்சினை தொடர்பில் கதைக்குமாறு சில அதிகாரிகள் தன்னை கேட்டுக் கொண்டதாக வைத்தியர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, நாடாளுமன்றத்திற்கு சென்ற பிறகும் தான் ஏமாற்றப்பட்டால் தான் வைத்தியராக இனிமேல் பணியாற்ற மாட்டேன் என்றும் வைத்தியர் அர்ச்சுனா கூறியுள்ளார்.

மேலும், தன்னை பத்திரமாக கொண்டு சென்று வவுனியா வரையில் விடுமாறும் வைத்தியர் மக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.

தொடர்ந்தும் அவர் கூறிய விடயங்கள் கீழுள்ள காணொளியில்..