தாமதமான எரிபொருள் கப்பல்! கஞ்சன வெளியிட்டுள்ள தகவல்

இன்று அதிகாலை நாட்டுக்கு வரவிருந்த எரிபொருள் கப்பல் தாமதமாகியுள்ளதாக அமைச்சர் கஞ்சன விஜயசேகர தெரிவித்துள்ளார்.

40,000 மெட்ரிக் தொன் 92 ரக பெட்ரோல் ஏற்றி வரும் எரிபொருள் சரக்கு கப்பல் 1 நாள் தாமதாகவே இலங்கைக்கு வரும் என தெரிவிக்கப்படுள்ளது.

டுவிட்டர் பதிவு ஒன்றின் மூலம் குறித்த விடையத்தை தெரிவித்துள்ளார்.

மேலும் இன்றும் நாளையும் நாடளாவிய ரீதியில் வரையறுக்கப்பட்ட அளவே பெட்ரோல் விநியோகிக்கப்படும் எனவும் குறிப்பிடுள்ளார்.