சீனாவால் இஸ்ரேலுக்கு பேரிடி : ஈரானுக்கு 100 போர் விமானங்களை வழங்கும் சீனா

 
இஸ்ரேலை   சமாளிப்பதற்காக ஈரானுக்கு  , சீனா  ஜே-10சி எனும் ரகத்தை சேர்ந்த 100 போர் விமானங்களை வழங்கவும் வாய்ப்புள்ளதாக பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.

பாலஸ்தீனத்தின் காசா மீதான போர் மற்றும் லெபானானில்  ஹிஸ்புல்லா அமைப்புகளுக்கு எதிரான தாக்குதல், ஈரான் தலைநகர் டெக்ரானில் வைத்து ஹமாஸ் தலைவரை கொலை செய்தது, லெபனானில் வைத்து ஹிஸ்புல்லா தலைவரை வீழ்த்தியiஅ உள்ளிட்டவற்றால் ஈரான் கடும் சினம் கொண்டுள்ளது.

இதனால் அண்மையில் ஈரான், இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக இஸ்ரேலின் விமானப்படையினர், ஈரானுக்குள் நுழைந்து அதிரடி தாக்குதலை நடத்தினர்.

 
இதனால் தற்போது இஸ்ரேல் - ஈரான் இடையே பெரும் பதற்றம் நீடித்து வருகிறது. இஸ்ரேல் - ஈரான் மோதலை பொறுத்தவரை சீனா, ஈரான் பக்கமும், அமெரிக்கா இஸ்ரேல் பக்கமும் உள்ளது.

 
இதற்கிடையே சீனாவால் இஸ்ரேலுக்கு பெரும் சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அதாவது சீனாவும் பாதுகாப்பு துறையில் அதிக சக்தி வாய்ந்த நாடாக காணப்படுகின்றது.

கப்பற்படை, விமானப்படையில் நவீன தொழில்நுட்பங்களை சீனா பயன்படுத்தி வருகின்றது.
இதனடிப்படையில் அண்மையில் சீனாவில் ஹ_ஹாய் நகரில் விமான கண்காட்சி ஒன்று நடைபெற்றது.

 
இந்த விமான கண்காட்சியில் ஈரான் விமானப்படை கமாண்டர் பிரிகேடியர் ஜெனரல் ஹமீத் வாஹேடி பங்கேற்று பார்வையிட்டுள்ளார்.

 
இந்நிலையில் ஈரான் விரைவில் சீனாவிடம் இருந்து 100 ஜே - 10சி ரக போர் விமானங்களை வாங்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இஸ்ரேலுக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்றால் ஈரான் விமானப்படையில் அதிநவீன விமானங்களை சேர்ப்பது முக்கியம் என கூறப்படுகின்றது.

அந்த வகையில் சீனாவின் ஜே - 10சி ரக விமானங்களை இணைத்தால் ஓரளவு இஸ்ரேலுக்கு நெருக்கடி கொடுக்க முடியும் என்று ஈரான் நினைக்கிறது. இதனால் ஈரானுக்கு உதவி செய்வதன் மூலம் சீனாவால், இஸ்ரேலுக்கு சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது.