சக வீரரின் காதலியுடன் சர்ச்சைக்குரிய தொலைபேசி உரையாடல் - சர்ச்சையில் சிக்கிய பாக். அணித் தலைவர் பாபர் அசாம்!


பாக்கிஸ்தான் கிரிக்கெட் அணியின் வீரர்கள் தொடர்பில் அடிக்கடி பரபரப்பான சர்ச்சைக்குரிய செய்திகள் வெளிவருவது வழமை.

அந்தவகையில், பாக்கிஸ்தான் அணியின் தலைவரும் ஆரம்பத்துடுப்பாட்ட வீரருமான பாபர் அசாம் தொடர்பில் சர்ச்சை ஒன்று வெளியாகியுள்ளது.

அவரின் தொலைபேசி உரையாடல் தொடர்பிலான காணொளி ஒன்று வெளியாகி ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாபர் அசாம், பாக்கிஸ்தான் அணியின் சக வீரர் ஒருவரின் காதலியுடன் காணொளி மூலம் இடம்பெற்ற ஆபாச உரையாடல்கள் மற்றும் செய்திகள் மூலம் இடம்பெற்ற உரையாடல்கள் இணையத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ரசிகர்கள் பலர் இதைப்பார்த்து தமது விமர்சனங்களை வெளியிட்டுள்ளதுடன், சிலர் காணொளியில் உள்ளது பாபர் அசாம் இல்லை, அவர் கதைப்பதைப் போன்று காணொளியை உருவாக்கி உள்ளனர் எனவும் ஆதரவுக்குரல் எழுப்பி வருகின்றனர்.

இவர் எந்த வீரரின் காதலியுடன் உரையாடியுள்ளார் எனும் தகவல் வெளியாகவில்லை.