யாழில் திடீரென உயிரிழந்த கிராம சேவகர்: விசாரணையில் வெளிவந்த தகவல்

மூளைக் காய்ச்சல் காரணமாக யாழ்ப்பாணத்தில் கிராம சேவகர் ஒருவர் நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார்.

புத்தூர் கிழக்கு பகுதியைச் சேர்ந்த குமாரன் குகதாசன் (வயது 48) என்ற ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த நபர் தீபாவளி தினத்தன்று மயங்கி விழுந்துள்ளார்.

இந்நிலையில், அவர் அச்சுவேலி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, பின்னர் அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்துள்ளார்.

யாழில் திடீரென உயிரிழந்த கிராம சேவகர்: விசாரணையில் வெளிவந்த தகவல் | Death Police Investigating Srilanka

இந்நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார். அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.

மூளைக் காய்ச்சலினாலேயே மரணம் சம்பவித்துள்ளதாக பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது.