ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லாவை (Hassan Nasrallah) கொல்ல பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டு தொடர்பான தகவலை அமெரிக்க செனட் உறுப்பினர் ஒருவர் வெளியிட்டுள்ளார்.
அமெரிக்காவில் (US) தயாரிக்கப்பட்ட 900 கிலோ எடையுள்ள (மார்க் 84 சீரிஸ்) வெடிகுண்டை இஸ்ரேல் தாக்குதலுக்கு பயன்படுத்தியதாக அமெரிக்க செனட் உறுப்பினர் மார்க் கெல்லி (Mark Kelly) தெரிவித்துள்ளார்.
அண்மையில் ஹிஸ்புல்லா தலைமையகம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் நஸ்ரல்லா கொல்லப்பட்டதை இஸ்ரேல் சனிக்கிழமை உறுதிப்படுத்தியது.
அத்துடன், கடந்த வெள்ளிக்கிழமை நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் ஹிஸ்புல்லா தலைவருடன் இருந்த மேலும் 20 பேர் கொல்லப்பட்டனர்.
இதேவேளை, குறித்த தாக்குதலை இஸ்ரேலானது, ஈரான்(iran) நாட்டைச் சேர்ந்த தமது உளவாளி ஒருவரின் உதவியுடன் மேற்கொண்டதாக அண்மையில் தகவல்கள் வெளியாகியிருந்தன.
அத்துடன், இதற்கு முன்னதாக ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே கொல்லப்பட்டதற்கும் ஈரான் உளவாளியே காரணம் என தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறானதொரு பின்னணியில் இஸ்ரேலை பலி தீர்க்க ஈரான் மற்றும் ஆதரவு அமைப்புக்கள் இணைந்து பாரிய தாக்குதல் ஒன்றுக்கு தயாராகி வருகிறதாக கூறப்படுகிறது.