ரோபோட்டிக்ஸ் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) துறையில் 7,500 ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இன்று (03) இடம்பெற்ற அமைச்சரவை ஊடகவியலாளர் சந்திப்பின் போது கருத்து தெரிவித்த அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன, தேசிய கல்விக் கொள்கை கட்டமைப்பின் மூலம் டிஜிட்டல் மாற்றம் மிக முக்கியமான அம்சமாக இனங்காணப்பட்டுள்ளதாகவும், இதற்காக அரச மற்றும் தனியார் துறைகளுக்கு இடையிலான ஒத்துழைப்பையும் தெரிவித்தார்.
செயற்கை நுண்ணறிவு மற்றும் புதிய தொழில்நுட்பங்களின் பயன்பாட்டிற்காக ஊக்குவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, தகவல் தொழில்நுட்பம், மெகாட்ரானிக்ஸ் மற்றும் ரோபோட்டிக்ஸ் போன்ற நடைமுறைப் படிப்புகளை நடத்துவதில் அனுபவம் வாய்ந்த ஒரு நிறுவனமான திறன்கள் தொழில்நுட்பக் கல்லூரி (SCOT CAMPUS) முன்வைத்த திட்ட முன்மொழிவின்படி முன்னோடி திட்டம் வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது எனவும் கூறியுள்ளார்.
இவ்வாறு, தகவல் தொழில்நுட்பம், உயிரி தொழில்நுட்பம், பொறியியல் தொழில்நுட்பம், விஞ்ஞானம் மற்றும் அனைத்து மாகாணங்களையும் உள்ளடக்கிய STEAM கருத்தாக்கம் தொடர்பில் 7,500 ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிப்பதற்காக ஜனாதிபதி மற்றும் கல்வி அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட கூட்டுப் பிரேரணைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது