20 வேட்பாளர்கள் உயிரிழப்பு, 700 பேர் வெளிநாட்டில் : தேர்தல் ஆணைக்குழுவுக்கு ஏற்பட்டுள்ள புதிய நெருக்கடி


உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்த சுமார் 700 வேட்பாளர்கள் பொருளாதார பிரச்சினை காரணமாக வெளிநாடு சென்றுள்ளதாக மாவட்ட தேர்தல் அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும், கிட்டத்தட்ட இருபது வேட்பாளர்கள் இறந்துவிட்டதாக தெரிவிக்கபடுகிறது.

இது தவிர, பல்வேறு காரணங்களால் கிட்டத்தட்ட ஐநூறு வேட்பாளர்கள் கட்சி மாறியுள்ளதாக தேர்தல் அதிகாரிகளுக்கு தெரிய வந்துள்ளது.

இது தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆனந்த ரத்நாயக்கவிடம் வினவியபோது,

உள்ளூராட்சி மன்றங்களுக்கு வேட்புமனு தாக்கல் செய்தவர்களின் விபரங்களை கண்டறியும் விசேட நடவடிக்கை எதிர்வரும் காலங்களில் மேற்கொள்ளப்படும்.

உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பான புதிய வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டதன் பின்னர், வேட்பாளர்கள் தொடர்பில் அவ்வாறான விரிவான விசாரணை மேற்கொள்ளப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதற்கு மாவட்டச் செயலகங்கள் மற்றும் அந்தந்த அரசியல் கட்சிகளின் ஆதரவைப் பெறலாம் என தேர்தல் ஆணைக்குழு நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

இந்த நிலைமைகள் காரணமாக உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதில் பல நடைமுறைச் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாக தேர்தல் அதிகாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

உள்ளூராட்சி மன்றங்களுக்கான 8,711 வேட்பாளர்களைத் தெரிவு செய்வதற்கு கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வேட்புமனுக்கள் கோரப்பட்டன, அதில் 80,672 வேட்பாளர்கள் தோற்றுள்ளனர்.

ஏற்கனவே 2022 மார்ச் மாதம் நடத்தப்பட வேண்டிய உள்ளுராட்சிமன்றத் தேர்தல் ஒரு வருடம் பிற்போடப்பட்டு 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டது.
நாட்டிலுள்ள 341 உள்ளூராட்சி மன்றங்களில் காலி எல்பிட்டிய உள்ளூராட்சி மன்றத்தை தவிர்ந்து 340 உள்ளூராட்சி மன்றங்களுக்கான வேட்புமனுக்கள் கோரப்பட்டிருந்தன.
இந்நிலையில் நேற்று எல்லிபிட்டிய உள்ளுராட்சி சபைக்கும் வேட்மனு கோரும் திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே இம்முறை சகல உள்ளுராட்சி மன்றங்களுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.