வலிகாமம் வடக்கில் 108 ஏக்கர் காணிகள் உடனடி விடுவிப்பு - ரணிலின் அதிரடி உத்தரவு

யாழ்ப்பணம் வலிகாமம் வடக்கு பிரதேசத்தில் 108 ஏக்கர் காணிகள் உடனடியாக விடுவிக்கப்படும் என சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் அறிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு மாகாணத்தில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று ரணில் தலைமையில் யாழ் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

இதன் போது வலிகாமம் வடக்கில் இராணுவத்தின் பிடியில் உள்ள காணிகளில் பல்வேறுபகுதிகளிலும் உள்ள 108 ஏக்கர் காணிகளை உடனடியாக விடுவிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, ஏனைய காணிகள் படிப்படியாக விடுவிக்கப்படும் எனவும் கூறப்பட்டது. அந்த வகையில் பலாலி வீதியன் கிழக்கில் உள்ள விவசாய காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தப்பட்டது.

அத்துடன் பலாலி விமான நிலையத்திற்கு அருகில் உள்ள அந்த பகுதியில் கட்டிடங்கள் கட்ட கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், விவசாய தேவைக்காக அவற்றை விடுவிக்கும்படி தமிழ் மக்கள பிரதிநிதிகள் வலியுறுத்தினதையடுத்து அது பற்றி ஆராய்வதாக ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

மேலும், நாகர்கோயில் பகுதி விடுவிப்பு பற்றியும் குறித்த கலந்துரையாடலில் கலந்துரையாடப்பட்டது.