'கஞ்சாவை குடித்து விட்டு கொலை செய்தேன்.." கம்பளை யுவதியின் கொலை தொடர்பில் சந்தேகநபர் வெளியிட்ட அதிர்ச்சி குரல் பதிவுகம்பளையில் காணாமல் போயிருந்த நிலையில், கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட யுவதியின் உடல் நீதவான் முன்னிலையில் இன்று தோண்டி எடுக்கப்பட்டுள்ளது.

கம்பளை, வெளிகல்ல எல்பிட்டியைச் சேர்ந்த பாத்திமா முனவ்வரா என்ற 22 வயது யுவதி யுவதியின் உடலே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.

மேலும் குறித்த யுவதியை கொலை செய்ததாக கூறி அந்த பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் பொலிஸ் நிலையத்தில சரணடைந்துள்ளதோடு,  யுவதியை கொலை செய்தமைக்கான காரணத்தை தனது குரல் பதிவு ஒன்றின் ஊடாக அந்த இளைஞர் வெளியிட்டுள்ளார்

 'தான் போதைவஸ்திற்கு அடிமையானவன் என்றும் தனது ஊரில் 98  வீதமானோர் போதை பாவனையில் இருப்போர் என்றும் தான் போதையிலேயே இக்குற்றத்தை செய்ததாகவும் குறித்த இளைஞனர் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.

'இதற்கு பொறுப்பு கூற வேண்டியவர்கள் தான் மட்டுமில்லை என்றும், போதை பொருளுக்கு அடிமையாக்கியவர்கள்;, விற்பனையாளர்கள், அதனை தடுக்க தவரிய சமூகத் தலைவர்கள் என பலரின் மீதும் இந்த இளைஞன் குற்றம் சுமத்தியுள்ளான்…

கண்டி கெலி ஓயா நகரில் அமைந்துள்ள மருந்தகம் ஒன்றில் கடமையாற்றிவந்ததாகக் கூறப்படும் மேற்படி யுவதி கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை தனது தாயிடம் பஸ்ஸ{க்கு   நூறுரூபாய் பணத்தை பெற்றுகொண்டு  தொழில் புரியும் இடத்திற்கு வீட்டிலிருந்து சென்றுள்ளார்.

வீட்டிலிருந்து சுமார் 100 மீற்றர் தூரத்தில் அமைந்துள்ள பள்ளிவாசலில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கெமராவில் பாத்திமா முனவ்வரா செல்வது பதிவாகியிருந்தது.

எனினும் அதற்கு அப்பால் உள்ள கெமராக்களில் பாதிவாகியிருக்கவில்லை. எனவே வீட்டிலிருந்து 100 மீற்றர் இடைவெளியிலேயே யுவதி காணாமல் போயிருக்க கூடும் என்ற கோணத்தில் தேடப்பட்டுவந்த நிலையில் குறித்த யுவதியின் வீட்டிலிருந்து சுமார் 500 மீற்றர் தூரத்தில் பிரதான வீதியிலிருந்து 50 மீற்றர் உட்புறமாக காட்டுப்பகுதியிலிருந்து வெள்ளிக்கிழமை  (12) மாலை யுவதியின் தண்ணீர் போத்தலும் ஒரு காலணியும் மீட்கப்பட்டன.

இந்நிலையில் குறித்த பிரதேசம் பொலிஸ் பாதுகாப்பு வலயமாக மாற்றப்பட்டு நீதவான் முன்னிலையில் சந்தேகத்திற்கிடமான குழி காணப்படும் இடத்தினை தோண்டி பார்ப்பதற்கான ஏற்பாடுகளை பொலிஸார் மேற்கொண்ட நிலையில், குறித்த யுவதியின் சடலம் இன்று தோண்டி எடுக்கப்பட்டுள்ளது.