NEET தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது!

MBBS, BDS படிப்புகளில் சேருவதற்கு ஆண்டு தோறும் நீட் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.தமிழ்நாட்டில் கடந்த 2017 முதல் நீட் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.நடப்பு கல்வியாண்டில் ( 2020-2021 ) இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கான நீட் தேர்வு கடந்த செப். 13-ம் தேதி நாடு முழுவதும் நடைபெற்றது.15.97 லட்சம் பேர் நீட் தேர்வுக்காக பதிவு செய்திருந்த நிலையில் 14.37 லட்சம் பேர் செப்.13-ம் தேதி நடைபெற்ற தேர்வை எழுதினர்.

கொரோனாவால் நீட் தேர்வை எழுதாமல் போன சுமார் 290 பேருக்கு அக்.14-ல் தேர்வு நடைபெற்றது.இந்நிலையில் நீட் தேர்வின் முடிவுகளை மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் இன்று மாலை 4 மணிக்கு மேல் வெளியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

தேசிய தேர்வு முகமையின் இணையதளத்தில் வெளியிடப்பட உள்ள தேர்வு முடிவுகளை, தேர்வர்கள் தங்களின் பதிவு எண்ணை உள்ளிட்டு அறிந்துகொள்ளலாம் என்று மத்திய கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது.நீட் கட் – ஆப் மதிப்பெண் அடிப்படையில் மருத்துவக் கலந்தாய்வு நடைபெற உள்ளது.

தமிழகத்தைப் பொறுத்தவரை நடப்பு ஆண்டில் கொரோனா பரவல் காரணமாக ஆன்லைனில் கலந்தாய்வை நடத்த மருத்துவக் கல்வி இயக்ககம் முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.