தீ விபத்துக்குள்ளான “MT New Diamond“ கப்பலில் உள்ள அனைத்து விதமான எரிபொருள் மாதிரிகளையும் இன்றைய தினம் எடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதற்காக விஷேட குழு ஒன்று கப்பல் உள்ள இடத்திற்கு தற்போது சென்றுள்ளதாக கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆணையகம் தெரிவித்துள்ளது.
குறித்த கப்பல் தற்போது சங்கமண் கண்டி கடற்கரைக்கு கிழக்கே 52 மைல் தொலைவில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
சுழியோடிகளினூடாக கப்பல் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆணையகம் தெரிவித்துள்ளது.