Mississuaga வில் வியாழக்கிழமை காலை நடந்த வாகன விபத்தில் இரண்டு பேர் பலி

Mississuaga  வில் வியாழக்கிழமை காலை நடந்த வாகன விபத்தில் இரண்டு பேர் பலி, 6 பேர் காயமடைந்தனர் மேலும் விபத்தில் காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்டனர்.

 Peel காவல் துறையினரின் தகவலின் படி இன்று காலை 7 மணியளவில் 407 பெரும் தெருவின் தெற்கு பக்கமாக உள்ள  McLaughlin தெருவில், இரண்டு வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதால் இந்த விபத்து நிகழ்ந்தது என்று தெரிவித்தனர் 

McLaughlin சாலையின் ஒரு பகுதி மூடப்பட்டுள்ளது, மேலும் இது சிறிது நேரம் மூடப்பட்டிருக்கும் என்று போலீசார் எதிர்பார்க்கிறார்கள்.