Mississauga வில் நடந்த வாகன விபத்தில் இருவர் பலி

வியாழக்கிழமை இரவு (Oct01)மிசிசாகாவில் இரண்டு வாகனங்கள் மோதியதில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாக Peel  காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Bristol Road West , Segriff Drive  பகுதியில் Terry Fox Way தெருவுக்கு அண்மித்ததாக விபத்து நடந்ததாக வந்த தகவலை அடுத்து அதிகாரிகள் சென்றபோது இரண்டு வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதால் இந்த விபத்து நிகழ்ந்ததாக அதிகாரி  Heather Cannon தெரிவித்தார் 

இந்த மோதலில் போக்குவரத்து டிரக் மற்றும் வாகனம் சம்பந்தப்பட்டதாக அதிகாரி  Heather Cannon மேலும் தெரிவித்தார் 

Cadillac காரினை செலுத்திவந்த 20 வயதுடைய சாரதியும் காரில் பயணம் செய்த 19 வயதுடைய பயணியும் இதில் கொல்லப்பட்டனர்

விபத்தில் சம்மந்தப்பட்ட Truck இன்   47 வயதுடைய,சாரதிக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை பாரிய விபத்துகளை விசாரிக்கும் பிரிவு விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்