Lock Down செய்வதை தவிர்க்க முடியாது என்று ஒண்டாரியோ மாகாண முதல்வர் Doug Ford தெரிவிப்பு

ஒண்டாரியோவில்  COVID-19 தொற்றுகள்  தொடர்ந்து அதிகரித்தால் மிகவும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பிராந்திய அளவில் lock down செய்வதை தவிர்க்கமுடியாது என்று ஒண்டாரியோ மாகாண முதல்வர் Doug Ford தெரிவித்தார்  

தொடர்ந்து நான்காவது நாளாக COVID-19 தொற்றுகள் அதிகரித்த நிலையில் மேலும் பிராந்திய ரீதியாக lock down  வரக்கூடும் என்று ஒண்டாரியோ மாகாண முதல்வர் Doug Ford தெரிவித்தார்   

வைரஸ் வீதங்களின் சமீபத்திய அதிகரிப்பு கவலைக்குரியது என்றும் இரண்டாவது அலை வரும் என்று தான் நம்புவதாகவும், வரும் நாட்களில் வைரஸை பரவலை தடுப்பதற்கான தடுப்பு  பாதுகாப்பு திட்டத்தை மாகாணம் அறிமுகப்படுத்தும் என்றும் அவர் கூறுகிறார்.

மாகாணத்தில் இன்று 313 புதிய COVID-19 வழக்குகள் பதிவாகியுள்ளன,

வைரஸ் பரவுவதை மெதுவாக்க பொது சுகாதார வழிகாட்டுதல்களை தொடர்ந்து பின்பற்றுமாறு Doug Ford  மக்களை வலியுறுத்தினார்.

அந்த வழிகாட்டுதல்களை மக்கள் மதிக்காத சமூகக் கூட்டங்கள் தொற்றுநோய்க்கான முக்கிய காரணங்கள்  என்று Doug Ford தெரிவித்தார்.