Kitchener பகுதியில் அமைந்துள்ள உணவகத்தில் covid -19 தொற்று பரவல்

ஒண்டாரியோ, Kitchener பகுதியில் அமைந்துள்ள Algarve உணவகத்தில் covid -19 தொற்று பரவல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது Waterloo பொது சுகாதார அதிகாரிகள் இந்த உணவகத்துக்கு அக்டோபர் மாதம் 27  ம் திகதியில் இருந்து நவம்பர் 4 ம் திகதி வரையான காலப்பகுதியில் விஜயம் செய்த 175 பேர் Covid -19 தொற்றுக்கு உள்ளாகியிருக்கலாம் என தெரிவித்து இருக்கிறார்கள், தற்போது இந்த உணவகத்துக்கு விஜயம் செய்த 6 பேருக்கு Covid -19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது

மேலும் குறிப்பிட காலப்பகுதியில் இந்த உணவகத்துக்கு சென்ற  அனைவரும்  Covid -19 தொடர்பான அறிகுறிகளை 14 நாட்களுக்கு  அவதானிக்கும் படியும் Covid -19 மருத்துவ பரிசோதனை செய்யுமாறும் Waterloo பொது சுகாதார அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்

Algarve உணவகம் தானாக முன்வந்து உணவகத்தை மூடியிருக்கிறார்கள் என்றும் விசாரணைகளுக்கு உத்துழைப்பதாகவும்  சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்